தலித் கிறிஸ்தவர்களை SC பட்டியலில் இணைக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 

தலித் கிறிஸ்தவர்களை SC பட்டியலில் இணைக்க வலியுறுத்துவது உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் பிரிவில் தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் இணைக்க வலியுறுத்தி கடந்த 73 ஆண்டுகால அநீதிக்கு எதிரான பெருந்துறை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 1950 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஆணை பதி மூன்றை ரத்து செய்ய வலியுறுத்தியும், நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்த வலியுறுத்தியும், நீதியரசர் கே.ஜி.பாலகிருஷ்ணன் ஆணையத்தை ரத்து செய்வது, தலித் கிறிஸ்தவர்களை SC பட்டியலில் உடனே இணைப்பது உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் இந்த கவண ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசுக்கு எதிரான கவன ஈர்ப்பு கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில், மதுரை உயர் மறை மாவட்டம் பேராயர்.அந்தோணி பாப்பு சாமி, மதுரை ராம்நாடு சமூக நீதிப் பேராயர் ஜெய் சிங் பிரின்ஸ் பிரபாகரன், மத்திய குழு உறுப்பினர் உலக திருஅவை மாமன்றம் பொதுச் செயலாளர் தென்னிந்திய திருச்சபை C.பெர்னாண்டஸ் ரத்தினராஜா, மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி, மற்றும் அனைத்து எஸ்சி எஸ்டி யூனிட் பொறுப்பாளர்கள் தலித் கிறிஸ்தவ ஊர் பொறுப்பாளர்கள், சமூகநீதிக்கான செயல்பாட்டாளர்கள், உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து ஐந்து அம்ச கோரிக்கையில் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *