செந்தில் பாலாஜியை பழிவாங்கல! -எச். ராஜா

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

இந்த ஆட்சியை எவ்வளவு சீக்கிரமா முடிவுக்கு கொண்டு வருகிறமோ அவ்வளவு சீக்கிரம் தமிழ்நாட்டுக்கு நல்லது. செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கை பழிவாங்கும் நடவடிக்கை இல்லை. செந்தில் பாலாஜியை சிறையில் தள்ளுவோம் என ஸ்டாலின் தான் கூறினார். அதற்காக அவர் சந்தோஷப்பட வேண்டும் என எச் ராஜா கூறினார்.பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சபாநாயகர் என்பவர் யார்? கட்சி சார்பு இல்லாதவர். அவர் ஒரு ஊழல் அமைச்சருக்காக பேசலமா? பாஜகவை சீண்ட வேண்டாம் என்று நான் ஸ்டாலினுக்கு அறிவுறுத்தலாகவே சொல்கிறேன். சீண்டினால் அதற்கான பலனை அனுபவித்துக் கொண்டு இருப்பது அதிகம் ஆகும். எஸ்.ஜி சூர்யாவில் சொன்னது எந்த தவறும் இல்லை. எஸ்.ஜி சூர்யா கூறிய சம்பவம் நடைபெற்ற இடம் வேண்டும் என்றால் மாறியிருக்கலாம்.

ஆனால், சம்பவம் நடைபெற்றது உண்மை. சமூக நீதி திமுகவோடு சந்தி சிரிக்கிறது. இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி பேசியிருக்குமா? திருமாவளவனை போல ஒரு தீய சக்தி இருக்க முடியாது. டிஜிபிக்கு சட்டப்படி ஒரு செயலை செய்யும் எண்ணம் இல்லை. எஜமான் என்ன உத்தரவு போடுகிறாரோ அதை நாம கேட்டுக்கொண்டு போவோம் என்ற மனநிலையில் ஒரு டிஜிபி எஸ்.ஜி சூர்யாவை கைது செய்து இருக்கிறார்.இது அராஜகமான செயல். இது திமுகவின் அழிவின் ஆரம்பம் இந்த ஒருவாரத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. செந்தில் பாலாஜி ஓபனிங் பேட்ஸ்மேன். முதல் நபர் ஜெயிலுக்கு போகிறவர். திமுகவில் ஊழல் செய்த அத்தனை பேரும் சிறைக்கு போவீர்கள். இந்த அரசாங்கம் எவ்வளவு காலம் ஓடும் என்று உறுதியளிக்க முடியாது. அவ்வளவு மோசமான சூழல் தமிழகத்தில் இருந்து கொண்டு இருக்கிறது. இந்த ஆட்சியை எவ்வளவு சீக்கிரமா முடிவுக்கு கொண்டு வருகிறமோ அவ்வளவு சீக்கிரம் தமிழ்நாட்டுக்கு நல்லது. செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கை பழிவாங்கும் நடவடிக்கை இல்லை. 2014ல் புகார் கொடுத்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செந்தில் பாலாஜியை சிறையில் தள்ளுவோம் என ஸ்டாலினே 2018-ல் பேசியிருக்கிறார். அவர் எடுத்த சபதம் தற்போது நிறைவேறியிருக்கிறது. அதற்காக ஸ்டாலின் சந்தோஷப்பட வேண்டும்.

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருப்பார் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆளுநர் இதை ஒத்துக்கொள்ளவில்லை. செந்தில் பாலாஜியை நீக்குவதற்கு கூட ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. பாஜகவிற்கு கோபம் வந்தால் என்ன ஆகும் என்று இப்போதே நான் சொல்லகூடாது. பாஜகவை சீண்ட வேண்டாம். பாஜக நிர்வாகிகளை கோபப்படுத்த வேண்டாம் என ஸ்டாலினுக்கு அறிவுரையாக சொல்கிறேன். விஜய் அரசியலுக்கு தாரளமாக வரலாம். அவரை வரவேற்கிறேன். ஆனால் தமிழ்நாட்டில் இதுவரை நாம இதுவரை பார்த்தது என்னவென்றால் திரை நட்சத்திரம் என்பதால் மட்டுமே எம்.ஜி.ஆர் ஜெயிக்கவில்லை. அதற்கு முன்பாக பல ஆண்டுகளாகவே அவர் அரசியலில் இருந்தார். அதேபோலத்தான் ஜெயலலிதாவும். எனவே விஜய் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். அரசியலுக்கு வருவது அவரோட உரிமை. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *