வாயை அடக்கு ! எங்க பதிலடி வேற மாதிரி இருக்கும் -அதிமுக மகளிர் அணி

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அதிமுக மகளிர் அணியினர் ஆவேசமாக கோஷமிட்டு வருகின்றனர். அண்ணாமலைக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.ஊழல் விவகாரத்தில் ஜெயலலிதா குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்து அதிமுக தலைவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் விமர்சனத்துக்கு அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அளித்துள்ள பேட்டி ஒன்றில், தமிழ்நாட்டில் நடைபெற்ற பல ஆட்சிகள் ஊழல் ஆட்சிகள் என்றும், முன்னாள் முதல்வர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் என்றும் கூறியிருக்கிறார். இந்தப் பேச்சு அதிமுகவினர் மத்தியில் பெரிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுக குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த நிலையில், இதுகுறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிமுக – பாஜக கூட்டணி, அண்ணாமலை கருத்து உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசங்கப்பட உள்ளது. பாஜக உடன் கூட்டணி பற்றி முக்கிய ஆலோசனை நடத்தப்படுவதாகவும் தெரிகிறது.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் முழக்கம் எழுப்பி வருகின்றனர். ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்திற்கு வெளியே குவிந்துள்ள தொண்டர்கள் அண்ணாமலைக்கு எதிராகவும், ஈபிஎஸ்க்கு ஆதரவாகவும் அதிமுகவினர் முழக்கம் எழுப்புவதால் பரபரப்பு நிலவி வருகிறது. குறிப்பாக, அதிமுக அலுவலகத்திற்கு வெளியே திரண்டுள்ள அதிமுக மகளிர் அணியினர், அண்ணாமலைக்கு எதிராக ஆவேசமாக கோஷங்களை எழுப்பினர். ஜெயலலிதாவை விமர்சித்த அண்ணாமலையை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என அவர்கள் ஆவேசமாகத் தெரிவித்துள்ளனர்.அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் இதுகுறித்துப் பேசுகையில், “அண்ணாமலைக்கு ஜெயலலிதாவை பற்றிப் பேச எந்த தகுதியும் இல்லை. அண்ணாமலை வாயை அடக்கிப் பேச வேண்டும். தலைமை உத்தரவு கொடுத்தால் அண்ணாமலைக்கு உரிய பதிலடி கொடுப்போம். எங்கள் பதிலடி வேறு மாதிரி இருக்கும். அண்ணாமலை வீட்டுக்கே சென்று நாங்கள் பதிலடி கொடுப்போம்.அதிமுகவை சீண்டினால் மேலிடம் தனக்கு கூடுதல் பொறுப்பு கிடைக்கும் என்று நினைக்கிறார் அண்ணாமலை. ஜெயலலிதாவை பற்றி அண்ணாமலை பேசுவதை எங்களால் பொறுத்துக்கொள்ளவே முடியாது. அண்ணாமலை நேற்று வந்தவர். அண்ணாமலை செயல்படாத பல்பு.. சுடுதண்ணியை பிடிச்சு மூஞ்சில ஊத்திடுவோம்.” என அதிமுக மகளிர் அணியினர் கடுமையாகப் பேசியுள்ளனர்.

ead more at: https://tamil.oneindia.com/news/chennai/aiadmk-women-s-wing-chants-against-bjp-state-president-annamalai-516316.html?story=3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *