ரேஷன் கடைகளுக்கு ஸ்டாலின் போட்ட உத்தரவு..ஜாக்பாட் அறிவிப்பு !

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

ரேஷன் கடைகளுக்கு வருமானம் ஈட்டுவதற்கான புதிய திட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ளது. நாடு முழுக்க ரேஷன் கடைகள் தற்போது நவீனமாகி ஆகி வருகின்றன. தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுக்க ரேஷனில் கடந்த சில மாதங்களாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மக்களின் வசதிகளை மனதில் வைத்து ரேஷன் பொருட்கள் வாங்குவதை எளிதாக்கும் விதமாக வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளன. தமிழ்நாடு முழுக்க ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வாங்க மக்கள் தங்கள் கருவிழிகளை பயன்படுத்தும் முறை கொண்டு வரப்பட உள்ளது. தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் கைரேகையைப் பதிவு செய்து பொருட்கள் வழங்கும் திட்டம் அமலில் உள்ளது. இதை தற்போது மேம்படுத்தி வருகிறார்கள்.

இப்படி ரேஷன் கடைகளில் பல அதிரடி திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. அதன் ஒரு கட்டமாக ரேஷன் கடைகளுக்கு வருமானம் ஈட்டுவதற்கான புதிய திட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ளது. வருமானம்: அதன்படி ரேஷன் கடைகளுக்கு தற்போது தனியார் லாரிகள்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த தனியார் லாரிக்கு பதிலாக தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் வழியாக புதிய லாரிகள்., வாகனங்கள் வாங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்படும்.இதன் மூலம் அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் திருடப்படுவது மொத்தமாக தடுக்கப்படும். அதன்படி தனியார் வாகனங்களின் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்படும். இதனால் வாகனங்களுக்கான வாடகை செலவு பெருவாரியாக குறையும். இதெல்லாம் போக ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் ஏற்றி செல்லும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் அந்த வாகனங்களை வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்ட முடியும். இதன் மூலம் தொடக்க நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு பெரிய அளவில் வருவாய் கிடைக்கும். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட உள்ள மொபைல் ரேஷன் கடைகளுக்கும் இதேபோல் வாகனங்கள் வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஜாக்பாட் திட்டம் தமிழ்நாட்டில் விரைவில் அமலுக்கு வர உள்ளது. இதன் மூலம் ரேஷன் கடைகளுக்கு வருவாய் கொட்ட போகிறது. இன்னொரு பக்கம் வரும் நாட்களில் தமிழ்நாடு முழுக்க கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரேஷன் பொருட்கள் திருடப்படுவது குறையும். ரேஷன் பொருட்களை மக்கள் வாங்காத நிலையில், அதை வாங்கியதாக கூறி ஏமாற்றி வெளியே விற்கும் பழக்கம் குறையும். வாங்கப்படாத ரேஷன் பொருட்கள் மீண்டும் கிடங்கிற்கே செல்லும் முறையை கொண்டு வர முடியும். தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் பொருட்கள் அடிக்கடி திருடப்படுவதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. மக்களுக்கு செல்ல வேண்டிய பொருட்களை சிலர் திருடி அண்டை மாநிலங்களில் விற்று வருகிறார்கள். அது முற்றிலுமாக தடுக்கப்படும். பயோமெட்ரிக் வேலை செய்யாத சமயங்களிலும், இனி கண் மூலம் பொருட்களை வாங்க முடியும். இந்த புதிய திட்டத்தின்படி மக்கள் தங்கள் கண்களை காட்ட வேண்டும். இதை லேசர் கருவிகள் பதிவு செய்யும். கண் கருவிழி பதிவுகள் மூலம் ரேஷன் கடையில் மக்கள் பொருட்களை வாங்க முடியும். இதன் காரணமாக ரேஷன் கடைகளில் பொருட்கள் திருடப்படுவது தடுக்கப்படும். கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பதிவு செய்து பொருட்கள் வழங்கும் திட்டம் சமீபத்தில் சென்னையில் தொடங்கப்பட்டது. அதேபோல் அரியலூர் மாவட்டம் மருவத்தூர் கிராமத்தில் தொடங்கப்பட்டது. அதன்பின் இன்னும் சில கிராமங்களில் இதே திட்டம் தொடங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் அடிப்படையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *