ஆன்லைன் ரம்மி பேஷ் பேஷ்… காணாமல் போயிட்டாரே சுரேஷ்…

வெங்கட்ராம்

நேற்றுதான் ஆன்லைன் ரம்மியால் தாம்பரத்தில் ஒரு உயிர் பிரிந்தது. அதனால் ஏற்பட்ட சோகம் தனிய முன் அடுத்த செய்தி வெளியாகியுள்ளது. ஒன்றல்ல இரண்டல்ல 16 லட்சம் ஆன்லைன் ரம்மியில் இழந்து விட்டு காணாமல் போய் உள்ளார் கே.கே நகரை சேர்ந்த ரமேஷ் என்கிற வியாபாரி. நாம் உழைத்து வரும் பணம் மட்டுமே நம்மிடம் நிற்கும் மற்ற அனைத்து செல்வமும் நம்மிடம் நிலைக்காது என்ற அறிவுரையை எவ்வளவு எடுத்துக் கூறினாலும் யாரும் காதில் வாங்கிக் கொள்வது போல் இல்லை. ஆசை யாரை விட்டது. மனைவி இரண்டு குழந்தைகள் என்று அழகான ஒரு குடும்பத்தை வைத்துக்கொண்டு இப்போது ஆன்லைன் ரம்மியில் இறங்கி அந்த குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலைமை உண்டாக்கி இருக்கிறது ரமேஷுக்கு. கேகே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷை தீவிரமாக தேடி வருகின்றனர். தினம்தோறும் இரத்த காவு கேட்கும் இந்த ஆன்லைன் ரம்மி, இதனால் ஏற்படும் உயிர்பலிக்கு யார் பொறுப்பு. எவ்வளவு எடுத்துக் கூறினாலும் அதை பொருட்படுத்தாமல் விளையாடும் மக்களா, அல்லது அதை தடை செய்து தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பின்னும் அந்த சட்டத்தை நிறைவேற்றாமல் இருக்கும் ஆளுநர் மீதா.., அல்லது ஆளுநரை கண்டிக்காமல் இருக்கும் மத்திய அரசின் மீதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *