வெயிலில் வரலாற்று சாதனை படைத்த பிப்ரவரி!!

வெங்கட்ராம்

ஒவ்வொரு ஆண்டும் பல புவியியல் ஆராய்ச்சியாளர்கள் உலக வெப்பமயமாதலை பற்றி எச்சரிக்கை விடுத்துக் கொண்டே இருக்கின்றனர். பல் கண்டத்தில் உருகும் பனிப்பாறையை பற்றின காணொளிகள் நாம் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறோம். ஆனால் ஆக்கப் பூர்வமான நடவடிக்கை ஏதேனும் எடுத்து இருக்கிறோமா என்றால், அது சந்தேகமே… ஒவ்வொரு ஆண்டும் ஐநா சபையில் அனைத்து உலக நாடுகளும் ஒன்று கூடி ஒரு தீர்மானம் நிறைவேற்றுகிறோம். அந்தத் தீர்மானத்திற்கு தன்மானம் இருந்தால் தற்கொலை செய்து கொள்ளும் போல. அப்படிப்பட்ட எந்த ஆக்கபூர்வ பணிகளும் இல்லாத ஒரு தீர்மானத்தை மட்டுமே நாம் வருடம் வருடம் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம்.

நாம் இந்தியாவை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு ஆண்டும் பிரபல தொழிற்சாலைகள் வருகின்றது இதனால் இத்தனை கோடி வேலைவாய்ப்புகள் கிடைக்கும் இத்தனை கோடி குடும்பங்கள் பலன் பெறும் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்கிறோமே தவிர அதனால் எத்தனை இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன என்பதை கணக்கெடுத்துக் கொள்ள தவறி விடுகிறோம். ஆரம்பத்தில் அந்த தொழிற்சாலைகள் நிறுவப்படும் போது பெரிய வளர்ச்சி என்ற மாய பிம்பம் தோன்றினாலும், அதன் பக்க விளைவுகள் தெரிய வரும்போது அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகளும் குணப்படுத்த முடியாத பல நோய்களும் அவர்களை பிடித்து வாட்டுகிறது. மனிதனையே உணர்ந்து கொண்டு மக்கள் எதிர்த்துப் போராடினாலும் வன்முறையாளர்கள் உள்ளே புகுந்து விட்டார்கள் என்று கூறி அவர்களை அடித்து உதைத்து சுட்டு அடக்குகிறோம்.

போராடுபவர்களை வன்முறையாளர்கள் போல் சித்தரிக்கும் பழக்கம் அதிகரித்தும் விட்டது. இப்போது அதன் விளைவாக இயற்கை தனது பதிலடி தர ஆரம்பித்து விட்டது என்றே தோன்றுகிறது. அதுவே தற்போது சமீப காலமாக நடக்கும் பூகம்பங்களை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ளலாம். இந்தியாவை பொருத்தவரை வரலாற்றில் இந்த பிப்ரவரி ஒரு மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது. ஆனால் அதனை எண்ணி நம்மால் மகிழ்ச்சி கொள்ள இயலாது ஏனென்றால் வரலாற்றில் இதுவரை இல்லாத அதிக வெப்பநிலை 29.54 டிகிரி பிப்ரவரி மாதம் பதிவாகி உள்ளது. கோடைகாலம் தொட வந்திருக்கும் முன்பே இவ்வளவு வெயில் என்றால் மார்ச் ஏப்ரல் மாதமான கோடைகாலத்தின் உச்சத்தில் என்ன நடக்கும் என்று நினைக்கும் போதே மனம் பதறுகிறது. நான் விழித்துக் கொள்ளும் நேரம் இது. இல்லையென்றால் நாம் தினந்தோறும் நூடுல்ஸ் ஆக வேண்டிய நிலைமை ஏற்படலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *