கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி; சற்றுமுன்பு 3வது நபரின் உடல் மீட்பு!

கொள்ளிடம் ஆற்றில் குளிக்கும் போது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 6 பேரில் மூன்றாவது நபரின் சடலம் தற்போது மீட்கப்பட்டுள்ளது.

பூண்டி மாதா கோயில் அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கி அடித்து சென்ற 6 பேர் இருவர் உடலை மீட்ட நிலையில் 6 மணி நேரத்திற்கும் மேல் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் மீட்பு படகில் சென்று தேடிய நிலையில் தாவீது என்பவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பேரின் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், புதை மணலில் சிக்கி உள்ளனரா என்கிற சந்தேகத்தில் பாதாள கரண்டி போட்டு தேடும் பணி நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 40 பேர் பூண்டி மாதா பேராலயத்திற்கு வந்து உள்ளனர்

இன்று காலை கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக சென்றனர். பூண்டி செங்கரையூர் பாலம் அருகில் குளித்துக் கொண்டிருந்தவர்களில் தூத்துக்குடி மாவட்டம் சிலுவை பட்டியை சேர்ந்த சார்லஸ், பிரவீன் ராஜ், பிரதீவ்ராஜ் , தாவீது, ஈஷாக், தெர்மஸ் ஆகியோரில்

ஆறுபேரும்‌ ஆழமான‌ பகுதியில் மூழ்கினர். இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நிலையில், தீவிர தேடலுக்குப் பிறகு சார்லஸ் பிரதீவ்ராஜ் ஆகிய இருவரைது சடலங்களையும் மீட்டனர் . தொடர்ந்து மீதமுள்ள 4 பேரையும் தேடி வந்த நிலையில் 6 மணி நேரம் தேடுதலுக்கு பிறகு தாவீது உடல் மீட்கப்பட்டது மீதமுள்ள 3 பேரின் உடலை ரப்பர் படகு மூலமாக தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஐயோ தெரியாம செஞ்சிட்டேன் என்ன விட்டுடுங்க… போலீசாரிடம் கதறிய  கிஷோர்.கே.சாமி

அந்த நேரத்துல அத பண்ணிருக்க கூடாது… அது தவறு என்பதை உணர்ந்ததனால டிவிட்ட டெலிட் பண்னேன்… சைபர்…