2024 தேர்தலில் பஜகவை ஒழித்துக்கட்ட இது போதும், திருமாவளவன் புது ஐடியா…

திருச்செந்தூர்  அருகே காயல் பட்டினத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனுக்கு சமூக நீதி காயிதே மில்லத் விருது வழங்கப்பட்டது- எவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும் வருகிற 2024 ஆம் வருடம் பாஜவை  தனிமைபடுத்தி ஒதுக்க வேண்டும்.

திருச்செந்தூர் அருகே காயல் பட்டினத்தில் காயல்  சமூக நீதி பேரவையின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்  நடைபெற்றது இந்த பொது கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக விடுதலை  சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டார்.. அவருக்கு சமூக நீதி காவல் காயிதே மில்லத் விருது முஸ்லீம்  பெருமக்கள் முன்னிலையில் வழங்கி கௌரவிக்கபட்டது.  இவ்விருதினை நெல்லை முன்னாள் மேயர் புவனேஸ்வரி வழங்கினார்.  

இதனை அடுத்து காயல் பட்டினத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில்  முதல் மற்றும் இரண்டாம்  இடத்தினை பிடித்த   மாணவிகளுக்கும் பரிசளிப்பு  மற்றும் ரொக்க பணமும் தொல்.திருமவளவன் கரங்களால் வழங்கப்பட்டது , தொடர்ந்து நெல்லை முன்னாள் மேயர் புவனேஸ்வரியால் தொல் திருமாளவனுக்கு வீரவாள் வழங்கியும், சிறப்பிக்கபட்டது இதனை தொடர்ந்து மேடையில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  தொல் திருமாளவன்.

சமூக நீதி என்பது அனைவருக்கும் பாரபட்சமின்றி  சமமாக கிடைப்பது தான் ,தற்போது  தமிழக முதல்வர் ஸ்டாலின் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று இத்திட்டதினை தொடங்கி வைத்திருக்கிறார். இது தான்  சமூக நீதி என்றும்.  கிறிஸ்துவத்திலும்  முஸ்லீமிலும் இருக்கும் ஆரதழுவும் கலாச்சாரம் சகோதரத்துவம்  ஏன் இந்து மாதத்தில் மட்டும் இல்லை என்று கேள்வி   எழுப்பினார் 

மேலும்  இந்திய தேசத்தையும், இந்திய மக்களையும் காப்பாற்ற வேண்டுமானால்  எவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும் அனைத்தையும் ஒதுக்கி விட்டு வருகிற 2024  ஆம் வருடம் பாஜகவை  தனிமைபடுத்த வேண்டும், ஒழித்து கட்ட வேண்டும்  என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *