கங்கை நதியை கலங்க படுத்திய இளைஞர்கள்..!! வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் கங்கை நதியில் படகு சவாரி செய்த நபர்கள் சிக்கன் சமைத்து சாப்பிட்டுக் கொண்டு, ஹூக்கா புகைத்தபடி சென்ற வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

இந்துக்களால் புனித நதியாக கருதப்படும்  கங்கை நதியில், இளைஞர்கள் சிலர் படகு சவாரி மேற்கொண்டு அதில் சிக்கன் மற்றும் குட்கா புகைத்தபடி செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக பல தரப்பிலும் கண்டன குரல்கள் எழுந்த நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று பிரக்யாராஜ் போலீசார் உறுதி அளித்துள்ளார். 

இது குறித்து பிரக்யாராஜ் போலீஸ் உயர் அதிகாரி ஷைலேஷ் பாண்டே கூறுகையில்  அசைவ உணவுகள் பயன்படுத்தப்படுவது வீடியோவில் தெரிகிறது.

இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏனைய நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார். 

குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. மத உணர்வுகளை புண் படுத்தியதாகவும், வழிபாட்டுத் தலத்தை அசுத்தப்படுத்தியதாகவும் சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *