தைவானை தனி நாடாக அங்கீகரிக்க  சீனா கடும் எதிர்ப்பு..!!

தைவானை தனி நாடாக அங்கீகரிக்கும் நாடுகளுக்கும் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி, சமீபத்தில் தைவான் பயணம் மேற்கொண்டார்.

இதனால் சீனா, தைவான் எல்லை அருகே போர் கப்பல்களையும், போர் விமானங்களையும் அனுப்பி போர் ஒத்திகையில் ஈடுபட்டது. சீனாவின் போர் விமானங்கள், தைவான் வான் எல்லைக்குள் அத்துமீறி பறந்தன. இதனால் தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தும் என்ற பதற்றம் ஏற்பட்டது.

சுற்றி வளைக்கும் சீனா.. திணறி ஸ்தம்பிக்கும் தைவான்! போர் தொடங்குகிறதா?  உற்று நோக்கும் உலக நாடுகள் | Taiwan Says China Simulating Attack On Its  Main Island - Tamil Oneindia

இந்நிலையில் சீனாவின் போர் பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தைவான் விமானப்படை போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. தைவானின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஹாலேன் விமானப்படை தளத்தில் எப்-16 ரக போர் விமானங்களில், ஏவுகணைகளை பொருத்துவது குறித்து விமானப்படையினர் நேற்று முன்தினம் செய்முறை விளக்கம் அளித்தனர். 

அதன்பின் நள்ளிரவில் எப்-16 போர் விமானங்கள் வானில் பறந்து, சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் போர் பயிற்சியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *