பிஹார் அரசியலில் பரபரப்பு..! செவிசாய்க்காத  முதல்வர் நிதிஷ் குமார்..!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய ‘நிதி ஆயோக்’ கூட்டத்தை பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் புறக்கணித்தார். ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியின் இந்தப் புறக்கணிப்பு மூலம் பிஹார் அரசியலில் சூடு பறக்கத் தொடங்கியது.

இதனால், பிஹாரில் உருவான ஆட்சி மாற்ற சூழலை மாற்றும் நடவடிக்கையாக டெல்லி மற்றும் பாட்னாவில் பல அதிரடி நடவடிக்கைகளை பாஜக எடுத்தது. 

இதன் ஒரு பகுதியாக பிஹார் முடக்கப்பட்ட மூத்த தலைவர்களான ரவிசங்கர் பிரசாத்தும், ஷாநவாஸ் உசைன் திங்கட்கிழமை டெல்லிக்கு அழைக்கப்பட்டனர்.

நிதிஷ் குமாருடன் பேச்சுவார்த்தை நடத்த பிஹார் மூத்த தலைவர்கள் நேரில் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் பீஹாரின் துணை முதல்வர் தார் கிஷோர் பிரசாத், பாஜகவின் மாநில தலைவர் டாக்டர். சஞ்சய் ஜெய்ஸ்வால் மற்றும் பொதுச் செயலாளர் சஞ்சீவ் சவுரசியா எம்எல்ஏ மற்றும் மருத்துவ நலத் துறை அமைச்சர் மங்கள் பாண்டே ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

ഒരുമുഴം മുൻപേ എറിഞ്ഞ് നിതീഷ്, അപ്രതീക്ഷിത തിരിച്ചടിയിൽ പകച്ച് ബിജെപി- Nitish  Kumar | BJP | JDU | Manorama News

அவர்களின் பேச்சுவார்த்தைக்கு முதல்வர் நிதிஷ் குமார் செவிசாய்த்த தாகத் தெரியவில்லை. இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், செவ்வாய்க்கிழமை நிதிஷ் குமாருடன் போனில் பேசியதாக தெரிகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில், மத்திய அமைச்சர் அமித் ஷா பல மாற்றங்களைச் செய்ய தானாகவே முன் வந்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக முதல்வர் நிதிஷ் குமாரின் முக்கிய எதிரியாக கருதப்படும் சபாநாயகர் விஜயகுமார் சின்ஹாவும் கட்சியிலிருந்து நீக்க தயாரானதானதாகவும் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *