அடுத்த கைது… செந்தில் பாலாஜிக்கு அண்ணாமலை வைத்த ‘செக்’!

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை விரைவில் அமலாக்கத்துறை விசாரிக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தபின் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இரவு, பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு நடத்தினார்.

இந்த சந்திப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மூத்த நிர்வாகிகள் பொன். ராதாகிருஷ்ணன், சிபி ராதாகிருஷ்ணன், சுதாகர் ரெட்டி, வானதி சீனிவாசன், எச். ராஜா, கரு. நாகராஜன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை: தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி பாஜக தலைவர் அண்ணாமலையை விவாதத்திற்கு அழைத்தது குறித்த கேள்விக்கு,
அமைச்சர் செந்தில்பாலாஜி ஏன் இவ்வளவு கோபப்படுகிரார் என தெரியவில்லை, ஆண் மகன் என ஏன் கூறினார் என தெரியவில்லை மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியது அமைச்சரின் கடமை என அண்ணாமலை குறிப்பிட்டார்.

மத்திய அரசு சொல்லியதால், மின் கட்டணத்தை உயர்த்தியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார், அப்படி மத்திய அரசு கூறிய அந்த கடிதத்தை காட்டுங்கள் என தான் நாங்கள் கேட்டோம், அதற்கு அவர் கோபப்பட்டு ஏதேதோ பேசுகிறார்.

இந்த விவகாரத்தில் ஆண்மகன் என ஏன் பேச வேண்டும் என கேள்வி எழுப்பிய அண்ணாமலை அப்படி என்றால் பெண்களுக்கு தைரியம் இருக்காதா, பெண்களை அமைச்சர் செந்தில் பாலாஜி கேவலப்படுத்துகிறாரா என கேள்வி எழுப்பினார்.

செந்தில் பாலாஜி தவறு செய்கிறார் எனவே அதை நாங்கள் கோடிட்டு காட்டுகிறோம் தனிப்பட்ட வன்மம் கிடையாது என விளக்கமளித்தார்.

மின் துறையில் ஏகப்பட்ட குழப்பங்கள், குளறுபடிகள் நடந்திருப்பதாக விமர்சித்த அண்ணாமலை, செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை விரைவில் அமலாக்கத்துறையினர் விசாரிப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஆசிரியர் நியமின முறைகேடு வழக்கில் மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, நிலமோசடி வழக்கில் சிவசேனா எம்.பி, சஞ்சய் ராவத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அண்ணாமலை இப்படி பேசியிருப்பது தமிழக அரசியலில் அனலைக் கிளப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.