எதிர்க்கும் மக்கள்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செயல் கண்டனத்துக்குரியது..!! 

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் கடந்த ஐந்து மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த நாடும் போர்க்களமாக மாறியுள்ள நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் அவரது மனைவி ஒலனாவும் அமெரிக்காவின் பிரபல மாத இதழில் வோக் இதழுக்கான நேர்காணல் அளித்துள்ளார்.

இந்த நேர்காணல் அக்டோபர் மாதம் வெளியாகும் வோக் இதழில் இடம்பெறும். இதனிடையே நேர்காணலுக்கான முன்னோட்ட படங்களை வோக் இதழ் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது.  

Ukraine President and first lady olena-zelenska-vogue-controversy | வோக்  இதழ் அட்டைப் படங்களில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது மனைவி! -  புதிய சர்ச்சை

தற்போது இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் நடைபெறும் இந்த நேரத்தில் இது தேவையா என பலரும்  கண்டனம் எழுப்பி வருகின்றனர். 

இந்த புகைப்படங்களில் ஒலனா போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிற்கும் படங்களும், ஜெலன்ஸ்கியும், ஒலனாவும் ஜோடியாக இருக்கும் படங்களும் உள்ளன.

இந்நிலையில் புகைப்படங்களுக்கு வரவேற்பு ஒரு பக்கம் இருந்தாலும், போர் நடக்கும் நேரத்தில் போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் வெளியிடுவது அவசியமா என்ற எதிர் கேள்விகளும் எழுந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *