திடீரென பற்றி எரிந்த இ-பைக்; குழந்தைகளை பள்ளியில் விடச்சென்ற போது நடந்த கோரச்சம்பவம்!

E bike

ஒசூரில் பள்ளியில் விட குழந்தைகளை அழைத்து சென்றபோது, திடீரென தீப்பற்றி எரிந்த இ பைக் வாகனத்தால் பரபரப்பு நிலவியது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி விநாயகர் நகரை சேர்ந்த பிரவீன்குமார் என்பவரது எலக்ட்ரிக் பேட்டரி வாகனத்தை, அவரது நண்பர் சதாசிவம் என்பவர் தனது பிள்ளைகளை பஸ்தி, பாரதியார் நகரில் உள்ள அரசுப்பள்ளியில் விடுவதற்கு அழைத்து சென்றபோது, வாகனத்தின் பின் பகுதியில் புகை வருவதாக பொதுமக்கள் கூறியதால் உடனடியாக நிறுத்தப்பட்ட வாகனம் திடீரென புகை கிளம்பி தீப்பற்றி எரிந்து, நாசமானது.

எல்க்ட்ரிக் வாகனங்கள் தொடர்ந்து தீப்பற்றி எரியும் சம்பவங்களால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் ஒசூரில் நடந்த 2 வது சம்பவம் இது என்பது குறிப்பிடதக்கது.. யாருக்கும் காயங்கள் இல்லாதநிலையில் ஒசூர், அட்கோ போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எலக்ட்ரிக் பைக் இருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…