தொடரும் வெள்ளப்பெருக்கு..!! களத்தில் இறங்கிய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்..!!

மாநிலத்தில் கோதாவரி, கிருஷ்ணா நதி, ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது.
கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை காரணமாக கோதாவரி, கிருஷ்ணா நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக நதிக்கரைகளை ஒட்டியுள்ள பல கிராமங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. தொடர்ந்து கோதாவரியில் 70 அடிக்கு மேல் நீர்மட்டம் உயர்ந்து வெள்ள நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. வெள்ளத்தில் சிக்கிய குடும்பங்களை மீட்க ஆந்திர அரசு தூரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் வெள்ள நிவாரண நடவடிக்கை குறித்து முதல்வர் ஜெகன் மோகன் மூத்த அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
ஹெலிகாப்டர் மூலம் வான்வெளி ஆய்வுக்கு பிறகு வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் கலெக்டர்கள், அதிகாரிகளுக்கு அவர் பேசினார். தகவல் தொடர்பு அமைப்பில் தடங்கல் இல்லாமல் இருக்க செல்போன் டவர்களின் டீசல் சப்ளை செய்யும் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே நிவாரண பணிகளை முடக்கி வைத்துள்ள ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 கிலோ அரிசி, பருப்பு, பாமாயில், காய்கறிகள் மற்றும் பால் வழங்க உத்தரவிட்டார். இவற்றை 48 மணிநேரத்திற்குள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கோதாவரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஹெலிகாப்டரில் சென்று வான்வெளி ஆய்வு செய்யுமாறு ஐந்து மாவட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெகன் மோகன் அறிவுறுத்தியுள்ளார்.