வெளியே தெரியாமல் மூடிமறைக்க முயற்சி… திமுக அரசு மீது ஆர்.பி. உதயக்குமார் காட்டம்!

Udayakumar

மதுரை கப்பலூர் டோல்கேட்டை முன்னுரிமை அடிப்படையில் அகற்ற திமுக அரசை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் உள்ளிட்டோர் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். அதற்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திமுக அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

முன்னாள் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: 60 கிலோ மீட்டர் இடைவெளிக்குள் உள்ள சுங்கச்சாவடி அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார். இந்த கப்பலூர் டோல்கேட் தென் தமிழகத்தின் நுழைவு பகுதியாக உள்ளது. ஆகவே முன்னுரிமை அடிப்படையில் இதை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஏற்கனவே இதுகுறித்து சட்டமன்றத்தில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்றேன் மாவட்ட ஆட்சியருக்கு பலமுறை கவனத்திற்கு எடுத்துச்சென்றேன் . ஆனால் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளைக் கணக்கிட்டு வழக்கறிஞர்கள் மூலம் வாகன ஓட்டிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது 7 நாட்களுக்குள் 228 கோடி கட்ட வேண்டும் என்று அனுப்பப்பட்டுள்ளது. இதில் சில நபர்களுக்கு ஒரு கோடி, 80 லட்சம் ,என்று தொகை குறிப்பிடப்பட்டுள்ளது   அதையெல்லாம் ரத்து செய்ய வேண்டும் 
.

கடந்த எடப்பாடியார் தலைமையிலான ஆட்சியில் அரசுடன் சுகமாக பேசி முன்னுரிமை அடிப்படையில் உள்ளூர் மக்களுக்கு உரிய அனுமதி பாஸ் வழங்கப்பட்டது தற்போது  லட்சம், கோடி என்று தனி நபர்களுக்கு அனுப்பப்பட்டது இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்போது தொழில் முனைவோர் மாநாடு நடைபெற்று வருகிறது தற்போது இங்கு உள்ள தொழில் முனைவோர்கள் எல்லோருக்கும் முன்னுரிமை அளிக்கும் விதமாக இந்த டோல்கேட்டை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

அந்த கோரிக்கையை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.தற்போது கொடைரோடு டோல்கேட், பாறைபத்திடோல்கேட், சாத்தூர் டோல்கேட், சிட்டம்பட்டி டோல்கேட், இவையெல்லாம் கப்பலூர் டோல்கேட்டுக்கு 60 கிலோமீட்டருக்குள் உள்ளது, ஆகவே மத்திய அமைச்சர் அறிவித்துள்ளது படி தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆனால் அரசு அனுமதி மறுத்து வருகிறது நாங்கள் யாரையும் தொந்தரவு செய்யவில்லை.  அதேபோல் அரசு போக்குவரத்திற்கும் பல கோடியை கட்ட வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பலமுறை கோரிக்கை வைத்தும் அரசு கவனத்தில் எடுக்காத காரணத்தால் இன்றைக்கு மக்கள் எல்லாம் சேர்ந்து கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளோம். ஆனால் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக எங்ககளை ஜனநாயக கடமையை நிறைவேற்ற அரசு அனுமதி மறுக்கிறது 

. பேரிடர் காலம் போல் மக்கள் தற்போது சிரமம் அடைந்து உள்ளனர் கடந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதி கொடுத்தார். அந்த வாக்குறுதியை முதலமைச்சர் நிறைவேற்ற நாங்கள் போராடி வருகிறோம் ஆனால் எங்களை கைது செய்கின்றனர் நிச்சய மக்களுக்காக தொடர்ந்து போராடுவோம் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.