திடீரென அருந்தியர் காலனிக்குள் நுழைந்த முதல்வர்… என்ன செய்தார் தெரியுமா?

MK Stalin

இன்று மாலை ஆறு மணி அளவில் திடீரென நாமக்கல் சுற்றுலா மாளிகையில் இருந்து கிளம்பிய தமிழக முதல்வர் ஸ்டலின் அவர்கள், அருகே இருந்த சிலுவம்பட்டி அருந்ததியர் காலனிக்கு சென்று அங்கு வசித்த மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று காலை கரூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் நண்பகல் 12:00 மணி அளவில் அங்கிருந்து கிளம்பி கார் மூலமாக நாமக்கல் வந்தார். அப்போது வழிநெடுக ஏராளமான பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். இதனை அடுத்து நாமக்கல் சுற்றுலா மாளிகையில் மதிய உணவு அருந்திய முதல்வர் ஸ்டாலின் அவர்கள், சிறிது நேர ஓய்வுக்கு பின்பு மாலை 6 மணி அளவில் திடீரென சுற்றுலா மாளிகை அமைந்துள்ள பகுதிக்கு அருகே உள்ள சிலுவம்பட்டி அருந்ததியர் காலனிக்கு சென்றார். அங்குள்ள வீதிகளில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் அவர்களுடன் நடந்து சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு இருந்த ஏழை எளிய மக்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் அங்கு கூடியிருந்த படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களிடம் அவர்களின் கல்வி குறித்தும் தேவைகளையும் கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து அங்குள்ள வீடு ஒன்றினுள் திடீரென நுழைந்த முதலமைச்சர், அந்த தம்பதியரின் குறைகளை கேட்டு அறிந்தார். இதனை அடுத்து அங்கிருந்து கிளம்பி நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெறும் பிரமாண்ட மேடைக்கு வந்தார். மேடை அமைப்பை ஆய்வு செய்த முதலமைச்சர், மேடை வளாகத்தில் கொங்கு பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியை கண்டு ரசித்தார்.

அதாவது கொங்கு பெண்களின் பாரம்பரிய நடனமான ஈசன் வள்ளி கும்மி ஆட்டத்தையும் , கொங்கு ஆண்களின் பெருஞ் சலங்கை ஆட்டத்தையும் வெகுவாக கண்டு ரசித்த அவர், பின்னர் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார். பொம்மை குட்டை மேடு பகுதியில் நாளை நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டினை காலை 9.30 மணி அளவில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…