5 வயது வரை அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லை : அமைச்சர் அறிவிப்பு !!

5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் இனி கட்டணம் வசூலிக்கக் கூடாது என தமிழக அரசு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று முடிந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் பல்வேறு கோரிக்கைகளை அறிவித்துள்ளார்.

அதன்படி, 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் இனி கட்டணமில்லா பயணம் செயல்படுத்தப்படும் என கூறியுள்ளார். இதனிடையே அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் செயல்படும் அனைத்து பேருந்துகளிலும் தற்போது 3வயது வரை கட்டணம் இல்லாமல் குழந்தைகள் பயணித்து வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் அனைத்து பள்ளி பேருந்துகளிலும் முன், பின் புறங்களில் கேமராவுடன், சென்சார் கருவி பொருத்தும் வகையில் சிறப்பு விதிகள் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *