கேக் வெட்டி கொண்டாடிய விக்ரம் படக்குழுவினர்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் சீயான் விக்ரமின் 60-ஆவது படமான மஹான் திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியானது. அடுத்ததாக சீயான் விக்ரம் ‘கோப்ரா’ படத்தில் நடித்து வருகிறார். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாகவும், கே.ஜி.எஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர். 7 மாறுப்பட்ட வேடங்களில் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் இர்பான் பதான் வில்லனாக நடித்து வருகிறார்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. தொடர்ந்து படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.ஏற்கனவே கோப்ரா படத்தின் 95% படப்பிடிப்பு பணிகள் முடிக்கப்பட்டுவிட்தாக கூறி இருந்தனர்.

தற்போது மீதி 5% படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்ததை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். கேக் வெட்டும் பொது எடுத்த புகைப்படத்தையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் வரும் ஜூலை மாதம் இந்த படத்தை வெளியிட படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…