விரைவில் வெளியாகும் ‘பீஸ்ட்’ பர்ஸ்ட் சிங்கிள் பாடல்!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பீஸ்ட் ‘.நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து இந்த படத்தில் அபர்ணா தாஸ், செல்வராகவன், சதிஷ், யோகி பாபு, ஜஹான் விஜய், விடிவி கணேஷ், ரெடின் கின்ஸ்லே போன்ற பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்றுதான் இந்த படத்தை ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியிட வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனத்திற்கு விஜய் நெருக்கடி கொடுத்ததாக பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இதை தொடர்ந்து தற்போது ‘பீஸ்ட்’ படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. ஏற்கனவே ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என்று பல தகவல்கள் வெளியாகின. அதேபோல் தற்போது விஜய் படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகும் என்று கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை படக்குழுவினர் அதிகாரபூர்வமான தகவல்களை வெளியிடவில்லை. விஜய் ரசிகர்கள் தற்போது ஆவலாக ‘பீஸ்ட்’ பட அப்டேட்டிற்காக காத்திருகிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *