இந்திய விண்வெளி அமைப்பு – பிரதமர் திறப்பு

புதிதாக உருவாக்கியுள்ள இந்திய விண்வெளி அமைப்பை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக இன்று காலை 11 மணிக்கு திறந்து வைத்தார். இதுகுறித்து நேற்று பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அக்டோபர் 11-ஆம் தேதி காலை 11 மணிக்கு இந்திய விண்வெளி அமைப்பை நான் தொடங்கி வைக்க உள்ளேன் . அந்த அமைப்பை தொடங்குவதில் எனக்கு பெருமையாக இருக்கிறது.
மேலும், அந்தத் துறையில் உள்ள முன்னணி பங்குதாரர்களிடம் பேச வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். விண்வெளித் துறையில் ஆர்வம் உள்ளவர்கள் நாளை நடக்கும் நிகழ்ச்சியை தவறாமல் பார்க்க வேண்டும்.
இந்த அமைப்பில் இந்திய முன்னணி நிறுவனங்களான லார்சன் அண்ட் டர்போ, நெல்கோ, ஒன் வெப், பாரதி ஏர்டெல், மேப் மை இந்தியா, ஆனந்த் டெக்னாலஜி ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த அமைப்பை உருவாக்கியுள்ளனர். மேலும், கோத்ரேஜ், யூகஸ் இந்தியா, பெல், போன்ற நிறுவனங்களும் இந்த அமைப்பில் உள்ளது. கடந்த சில வருடங்களாக இந்திய விண்வெளித் துறை வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறது. கோவில் காலகட்டத்திலும் கூட இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இந்நிலையில் இந்த அமைப்பை உருவாக்கியது மிகவும் வரவேற்க தக்க செயலாகும்.