நலம் நலமாக… வாய் புற்றுநோய்க்குத் தீர்வு என்ன?
பொதுவாக, நம் பற்கள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், சிலருக்கு வாய் துர்நாற்றம், பற் சொத்தை போன்ற பாதிப்புகள் அதிகமாக இருக்கும். அது, நாம் பேசும் போது கூட வெளியில் வரும். இந்த வாய் துர்நாற்றம் மற்றும் ஈறுகளில் ரத்தம் கசிதல் போன்றவை வாய்ப் புற்றுநோய்க்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம் என டாக்டர் விக்னேஷ் எழில் ராஜன் கூறுகிறார்.
வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணம் என்ன? அதைக் குணப்படுத்த முடியுமா?
இதற்கு, ”வாயில் புற்று நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் புகையிலை உபபோகிப்பது தான். புகையிலை அதிகமாக உபயோகிப்பவர்களுக்கு வாய் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். அதைக் குணப்படுத்துவது என்பது அவருக்கும் உள்ள நோய் பாதிப்பின் தன்மை மற்றும் உடல் நிலையைப் பொறுத்து மாறுபடும்.
எனவே, வாயில் பாதிப்பு ஏற்பட்டால் ஆரம்பத்திலேயா மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது” என டாக்டர் விக்னேஷ் எழில் ராஜன் கூறுகிறார்.