18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.
நேற்று சென்னையின் பல்வேறு பகுதியிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில், தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நெல்லை தூத்துக்குடி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.