ஒலிம்பிக் கிராமத்தையும் விட்டு வைக்காத கொரோனா… வீரர்கள் அதிர்ச்சி

2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 ஆம் தேதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ளது.
இதற்காக அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படுகிறது.
இந்நிலையில், டோக்கியோவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்தது. கொரோனா நான்காம் அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. இதனை டோக்கியோ 2020 தலைமை நிர்வாக அதிகாரி தோஷிரோ முட்டோ உறுதிபடுத்தியுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாகவே, அங்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.