சிவகார்த்திகேயனின் ஆண் சிங்கம்!

சின்னத்திரை மூலம் வெள்ளித்திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் ஒரு மிக பெரிய இடத்தை பிடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் மீண்டும் ஒரு முறை தந்தையான செய்தியை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். நடிகர் சிவா தனது மகனின் பிஞ்சு கைகளை தன் தந்தை படத்தின் முன்பு பிடித்துக்கொண்டு இருக்குமாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தனக்கு இரண்டாவதாக ஆன் குழந்தை பிறந்திருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுக்கு புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார்
மேலும் பதினெட்டு ஆண்டுகளுக்கு பிறகு தனது கையை தன் தந்ததை, பிள்ளையின் வடிவில் பிடித்திருக்கிறார் என்று உருக்கத்துடன் கூறியுள்ளார். மனைவி ஆர்த்திக்கு கண்ணீர் கலந்த நன்றியை தெரிவித்து இருக்கிறார்.
சிவா கார்த்திகேயன் தனது தாய்மாமன் மகளான ஆரத்தியை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராதன என்ற ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஆராதனா சிறுவயதிலேயே சினிமாவில் பாட்டு ஒன்று பாடியுள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் சிவாவுக்கு நண்பர்கள், உறவினர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.