திறக்கப்படும் சபரி மலை… கட்டுப்பாடுகள் என்னென்ன?

இந்தியாவில், கொரோனா பரவல் அச்சம் காரணமாக பல வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டு உள்ளது. கேரளாவின் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலும் மூட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், கோவில் மூட்டப்பட்டு மூன்று மாதங்களுக்கும் பிறகு ஆடி மாத பூஜைக்காக ஜூலை 16 ஆம் தேதி மாலை ஐயப்பன் கோவில் திறக்கப்பட உள்ளது. இதனையடுத்து, 17 ஆம் தேதி காலை முதல் 21 ஆம் தேதி இரவு வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தினமும் 5000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. மேலும், இதற்காக ஆன்லைனில் தான் முன் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும், 48 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் மற்றும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.