மாதவிடாய் பிரச்சனையை தீர்க்கும் “வெந்தயம் , இஞ்சி”

இந்தியாவில் ஆயுர்வேத குறிப்புகளில் இஞ்சி மிக முக்கியமான மூலிகைப் பொருள் ஆகும். புற்றுநோயை விளக்கவும் ,மூட்டுவலி , மாதவிடாய் வலி மற்றும் மாதவிடாய் பிரச்சனையை சீர் செய்வதற்கும் உதவுவது இஞ்சி.
இதேபோன்று வெந்தயமும் இந்திய ஆயுர்வேதத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வெந்தயத்தை நேராக உட்கொள்வதை விட வெந்தயம் ஊறவைத்த
நீரைப் பருகினால் அது ஆனடாசிட்டாக வேலை செய்வது தொடங்கி சர்க்கரை நோயை சீர் செய்வது போன்ற பல நன்மைகளை வழங்குகிறது.
1) இஞ்சி தண்ணீர்
செய்முறை:
ஒரு விரல் அளவில் இஞ்சி எடுத்துக்கொண்டு நன்றாக நசுக்கி ஒரு தம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
அதுக்கு உதித்து நன்றாக மஞ்சள் நிறத்திற்கு மாறியபின் அதை வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய நீரில் ஒன்றிலிருந்து இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து தினமும் காலை கொடுக்கலாம். தேன் இல்லையேல் வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதால் மாதவிடாய் பிரச்சனை தீர்ந்து போகும்.
2) வெந்தய தண்ணீர்
செய்முறை:
ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை எடுத்து ஒரு டம்ளர் அளவு தண்ணீரில் ஒரு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். பின்பு காலையில் ஊற வைத்த அந்த வெந்தயத் தண்ணீரை நன்கு காய்ச்சவும். பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை காய்ந்த பின்னர் அதை எடுத்து வடிகட்டவும். காலை உணவு உண்ட பின்னும் மாலையிலும் இதேபோன்று வெந்தய நீரை எடுத்து கொண்டால் மாதவிடாய் பிரச்சினை என்பதே இருக்காது.