‘அஞ்சாம் பாதிரா’ வில் அதர்வா!

கேரளாவில், திரில்லர் படமான திரிஷ்யம் படம் வெளியாகி வரவேற்ப்பைப் பெற்றதில் இருந்து தொடர்ந்து திரில்லர் படங்கள் வந்து கொண்டிருக்கிறது.

அதன்படி, ஜனவரி மாதம் 2020 ஆம் ஆண்டு வெளியான அஞ்சாம் பாதிரா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

6 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்தப்படம் 60 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்தது.

‘அஞ்சாம் பாதிரா’. ஐந்தாம் நாள் பாதி இரவில் என்று தமிழில் பொருள்படும் இந்த படத்தில் தொடர் கொலை, கொலைகாரனை தேடி பிடிப்பதே கதைக்கரு.கதையின் நாயகனாக குஞ்சாகோ போபன் நடித்திருந்தார்.

இந்தப் படம் தற்போது தமிழிலும் ரீமேக் செய்யப்படவுள்ளது.  ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தப்படத்தை தயாரிக்கிறது. அதில், நாயகனாக அதர்வா நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…