இந்தியாவிலேயே முதன்முறையாக பிக்பாஸில் கலந்து கொள்ளும் திருநங்கை?

இந்தியாவில் பல்வேறு மொழிகளில் பிக்பாஸ் எனப்படும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தமிழிலும் இந்த நிகழ்ச்சி நான்கு சீசன்களை முடித்து ஐந்தாவது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்த தொலைக்காட்சி ஐந்தாவது சீசனுக்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளது.
நிகழ்ச்சிக்காக பிரபலங்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த சீசனில் இந்திய வரலாற்றிலேயா முதன் முறையாக ஒரு திருநங்கையை கலந்து கொள்ள வைப்பது குறித்து முயற்சிகள் நடந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவர்ச்சி நடிகையாக இருந்து தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் சகீலாவின் வளர்ப்பு மகள் மிலாவைத் தான் பிக்பாஸில் கலந்து கொள்ள வைக்க முயற்சிகள் நடந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.