விலை குறைப்பால் ஆவின் பால் கொள்முதல் அதிகரிப்பு!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதும், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது போல் ஆவில் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து உத்தரவிட்டார்.

இந்த விலை குறைப்புக்குப் பின், ஆவில் பால் கொள்முதல் அதிகரித்துள்ளதாக ஆவின் நிர்வாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த மே 23-ம் தேதி சென்னையில் 15 லட்சத்து 40 ஆயிரம் லிட்டரும், மே 22-ம் தேதி பிற மாவட்டங்களில் 12 லட்சத்து 59 ஆயிரம் லிட்டரும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆவின் பால் விலைக் குறைப்பிற்கு பின்னர் அதன் விற்பனை 24 லட்சம் லிட்டரில் இருந்து 26 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது” என தெரிவித்துள்ளது.

மேலும், ஊரடங்கு காரணமாக சில தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதை நிறுத்தி வைத்துள்ளது. இதன்காரணமாக ஆவின் நிறுவனத்துக்கு தினசரி பால் கொள்முதல் 36 லட்சம் லிட்டரில் இருந்து 40 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது என ஆவின் நிர்வாகம் தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *