மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தான் தீர்வு என உலக சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. இதனால், இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
அந்த வகையில், தமிழகத்திலும் மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதன்காரணமாக, கொரோனா பாதிப்புகள் சற்றே குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் அடுத்த கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, பிரதீப் கவுர், குகநாதன், ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட 19 மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக அமைக்கப்பட்ட சட்டமன்ற குழு உறுப்பினர்களுடனும் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பிறகு, ஊரடங்கு குறித்த அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது,