கி. ராவுக்கு சிலை! முதல்வர் அறிவிப்பு

’கரிசல் இலக்கியத்தின் தந்தை’ என அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் வயது மூப்பு காரனமாக, புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று(17.5.2021) இரவு காலமானார்.

அவருக்கு, பலரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வந்தனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் தனது இரங்கலைத் தெரிவித்து விட்டு முழு அரசு மரியாதையுடன் அவரின் இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவித்தார்.

இலக்கிய உலகிற்கு கி. ரா ஆற்றியுள்ள சேவையை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு சிலை மற்றும் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என இலக்கிய ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று, கோவில்பட்டியில் கி. ராவுக்கு சிலை வைக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழ் இலக்கியத்திற்குச் செழுமை சேர்த்த கரிசல்காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன் (கி.ரா.), ஏட்டறிவைக் காட்டிலும் பட்டறிவால் பல இலக்கியப் படைப்புகளைத் தந்தவர்; வட்டார வழக்கு சார்ந்த இலக்கியப் படைப்புகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.

மறைந்த எழுத்தாளர் கி.ரா. படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை அரசு சார்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கவும், அவரது நினைவினைப் போற்றும் வகையிலும், அவரது படைப்பாளுமையை வெளிப்படுத்தும் வகையிலும், அவருடைய புகைப்படங்கள், படைப்புகள் ஆகியவற்றை, மாணவர்களும் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் வகையில் ஓர் அரங்கம் நிறுவப்படும்.

கரிசல் இலக்கியத்தை உலகறியச் செய்த கி.ரா.வுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்” என, கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…