நாளை முதல் 10 இரயில்கள் ரத்து!

இந்தியாவில், கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. இதனால், அந்தந்த மாநிலங்களில் நிலவும் கொரோனா பரவகுக்கு ஏற்றவாறு பாதுகாப்பு நடைமுறைகளை விதித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு மாநிலங்களுக்கு அனுமதி வழங்கியிருந்தது.
அதன்படி, தினசரி கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் ஊரடங்கு விதிமுறைகள் அமலில் இருக்கிறது. இதனால், இரயில் சேவையைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
எனவே, பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படும் 10 ரயில்கள் நாளை(மே 19) முதல் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக கிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது.கீழ்கண்ட பத்து ரயில்களும் நாளை முதல் இயக்கப்பட்டாது.