மாவட்டச் செய்திகள்

பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை :


திண்டுக்கல் கொடைக்கான‌ல், மேல்மலை கிராமமான கிளாவ‌ரை ம‌லைக்கிராம‌த்தில் பலத்த காற்று வீசி வருவதால் மூன்று வீடுக‌ளின் மேற்கூரையும், ப‌க்க‌வாட்டு சுவ‌ரும் சேத‌மடைந்துள்ள‌து.


கன்னியாகுமரி
கோவிட் ஊராடங்கில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அரசின் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைபிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க குமரி மாவட்டம் முழுதும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக வறண்டு கிடந்த குற்றால அருவிகளில் தண்ணீர் விழத் தொடங்யுள்ளது.
ஊரடங்கு காரணமாக அருவிக்கரைகள் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது


தூத்துக்குடி திருச்செந்தூரில் புதிய கோவிட் தடுப்பூசி மையத்தை தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால் நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு அனிதா ராதா கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.


சேலம் விமான நிலையத்தில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களும் கோவிட் தடுப்பூசி இரண்டாம் தவணையை இன்று எடுத்துக்கொண்டனர்


நீலகிரி கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உதகமண்டலம் பகுதிகளை கண்காணித்து வருகின்றனர்.


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்புரமணியன் தலைமையில் கோவிட் தடுப்பு ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது


நாமக்கல் மாவட்டம் பரமத்தி-வேலூரில் முழு ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கும் வகையில் காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.


திண்டுக்கல்: பழனி பேருந்து நிலையத்தில் உணவின்றி தவித்த ஆதரவற்றவர்களுக்கு திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி உணவு பொட்டலங்கள் வழங்கினார்


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு செங்கோடம்பாளையத்தில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் E.R ஈஸ்வரன் தமிழக அரசின் கோவிட்19 நிவாரண நிதி முதல் தவணை ரூ.2000 பொது மக்களுக்கு வழங்கினார்


சேலம் சூரமங்கலம் மண்டலத்தில் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் மக்கள் பயனடையும் வகையில் நடமாடும் மளிகை மற்றும் காய்கறி விற்பனை வாகனங்களை மாநகராட்சி ஆணையாளர் திரு.ரவிசந்திரன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.


இராமநாதபுரம் மாவட்டத்தில் கோவிட்19 நிவாரண நிதி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 2 ஆயிரத்தை போக்குவரத்து துறை அமைச்சர் திரு ராஜ கண்ணப்பன் வழங்கி தொடங்கி வைத்தார்.


ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல் கரோனா நிவாரணம் ரூ.2,000 வழங்கும் பணியை தொடங்கி வைத்தார் அமைச்சர் காந்தி.


விழுப்புரம் அருகே பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த முதியவர்களை காலில் விழ வைத்த விவகாரத்தில் 8 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் 2 பேர் கைது…


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆக்சிஜன் உற்பத்தி பணி பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த வல்லுநர்கள் உதவியுடன் ஆக்ஸிஜன் குளிர்விக்கும் கலனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்


தேனி மாவட்டம் போடியில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி தேவையின்றி பைக்கில் சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு போலீசார் அபராதம் விதிப்பு – 60 பைக்குகள் பறிமுதல்


சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி அதிக வாகனங்களில் மக்கள் பயணம் – வண்டலூரில் டி.எஸ்.பி தலைமையில் 25க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர சோதனை. திருமணம், துக்க நிகழ்வுக்கு செல்பவர்களுக்கு மட்டுமே அனுமதி


சேலம் செவிலியர்களுக்கு பாதுகாப்பு வசதி இல்லை – சேலம் அரசு மருத்துவமனை மீது குற்றச்சாட்டுLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *