கொரோனா உயிரிழப்பிலும் முதலிடம் பிடித்த இந்தியா!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,645 பேர் உயிரிழந்துள்ளதால், உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் கடந்த 24 மணி நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இந்தியா முழுவதும் புதிதாக 3,79,257 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,83,76,524 ஆக உயர்ந்தது. மேலும் 3,645 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,04,832 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டின் இதுவரை 15,00,20,648 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *