மேற்கு வங்கத்தில் கையெறி குண்டுகள் பறிமுதல்!
மேற்கு வங்கத்தில் இதுவரை இரண்டு கட்ட தேர்தல் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்துள்ளன. மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுவரை, நடந்த இரண்டு கட்ட தேர்தல்களிலும் பல இடங்களில் வன்முறை நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில், பிரங்கஞ்ச் ஜி.பியின் கீழ் உள்ள பத்மபுகூர் பகுதியில் கையெறி குண்டுகள் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அந்த பகுதியில் சோதனை நடத்தப்பட்டது.
இதில் புதரில் இருந்து 41 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இது குறித்து யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.