தொகுப்பாளார் ஹிந்தியில் பேசியதால் மேடையை விட்டு இறங்கிய இசைப்புயல்!

99 சாங்ஸ் திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் தொகுப்பாளர் ஹிந்தியில் பேச, ஏ.ஆர். ரகுமான் மேடையைவிட்டு இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்து தயாரித்துள்ள திரைப்படம் 99 சாங்ஸ். இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது, இசையமைப்பாளர்கள் அனிருத், ஜி.வி.பிரகாஷ், யுவன்சங்கர் ராஜா மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் தொகுப்பாளர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேச தொடங்கினார். திடீரென ஹிந்தியிலும் பேசத் தொடங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்  மேடையில் இருந்து இறங்கினார். மேலும் நான் முதலிலேயே உங்களிடம் தமிழில் தான் பேச வேண்டும் என்று கூறினேன் என கடிந்து கொண்டார். மேலும் அவரை தமிழில் தொகுத்து வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பல கலைஞர்கள் நிறைந்திருந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் தொகுப்பாளரை தமிழில் பேசுமாறு அறிவுறுத்தியது வந்திருந்த பார்வையாளர்கள் பலரையும் கவர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *