பாகிஸ்தான் பிரதமர் மனைவிக்கும் கொரோனா!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதியானது. சீனாவின் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்ட இரண்டு நாட்களில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில், அவரது மனைவி மனைவி புஷ்ரா பிபிக்கு கொரோனா பரிசோதனை செய்த நிலையில் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அவரும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில், தனக்காகவும் தன் மனைவிக்காகவும் பிராத்தனை செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார். மேலும், இம்ரான்கான் காணொளி வாயிலாக தனது அலுவல்களைக் கவனிப்பார் என அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.