பி.சுசீலா, ஏ.ஆர். ரெஹைனா ஆகியோர் இங்கிலாந்து விருதுக்கு தேர்வு!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு, இங்கிலாந்தில் விருது வழங்கப்பட உள்ளது.
‘இங்கிலாந்து மகளிர் நெட்வொர்க்’ அமைப்பை சேர்ந்தவர்கள், ஆண்டுதோறும், சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, இங்கிலாந்தில் சாதனை படைத்த பெண்களுக்கு, பாராட்டு விழா நடத்துவர். இவ்விழா அங்குள்ள பார்லிமென்ட் கட்டடத்தில், உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெறும்.
இந்தாண்டு, இங்கிலாந்துக்கு வெளியே, சாதனை படைத்த பெண்களை கவுரவிக்க உள்ளனர். கொரோனாவால் இவ்விழா, காணொலி காட்சி வாயிலாக இன்று நடக்கிறது. இதில், பின்னணி பாடகி பி.சுசீலா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியான, இசை அமைப்பாளர் ரெஹைனா ஆகியோர் கவுரவிக்கப்பட உள்ளனர்.