இந்திய தடுப்பூசியை போட்டுக்கொண்ட நேபாள இராணுவ தலைவர்

நேபாள இராணுவ தலைவர் பூர்ண சந்திர தாபா இந்தியாவால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை முதல் தவணையாக செலுத்திக்கொண்டார்.

Close-up medical syringe with a vaccine.

கடந்த மாதம் இந்தியாவிடமிருந்து நேபாளானது இரண்டாவது முறையாக 1 மில்லியன் கொரோனா தடுப்பூசியை பெற்றது.முதல் முறை கோவிஷீல்டு தடுப்பூசியை பெற்ற போதே அதனை நேபாளமானது அவசர தேவைக்காக நாடுமுழுவதும் செலுத்த தொடங்கியது. இந்நிலையில் மார்ச் 7-ஆம் தேதியிலிருந்து அடுத்த கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கவுள்ளது.இந்தியாவானது வாக்ஸின் மைத்ரி முயற்சியின் மூலம் அண்டைநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *