யுவராஜை மிஞ்சிய கிறிஸ் மோரிஸ்
2021ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான வீரர்களின் ஏலம் இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.
வெளிநாட்டு வீரர்களைச் சொந்தமாக்கிக் கொள்ள அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், தென்னாப்பிரிக்காவின் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸை, சென்னை அணி 16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
2015 ஆம் ஆண்டு இந்திய வீரர் யுவராஜ் சிங், 16 கோடிக்கு ஏலம் போனதே அதிகபட்சத் தொகையாக இருந்தது.
இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகத் தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை கிறிஸ் மோரிஸ் பெற்றுள்ளார்.