மணியாட்சி விபத்து – முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

திருநெல்வேலி  மாவட்டம் திருமணக் கொழுந்துபுரம் கிராமத்திலிருந்து, தூத்துக்குடி மாவட்டம் சவரிமங்கலம் பகுதிக்கு விவசாயக் கூலி வேலை செய்வதற்காக, குட்டி யானை என்றழைக்கப்படும் வாகனத்தில் 35 பேர் சென்று கொண்டிருந்தனர். திருக்கொழுந்துபுரத்தைச் சேர்ந்த சித்திரை  என்பவர் வாகனத்தை ஓட்டிச் சென்றார்.

வாகனம் மணியாச்சி அருகே வந்தபோது, அதீத வேகம் மற்றும் பளு காரணமாக பாலத்தில் திரும்ப முடியாமல் நிலை தடுமாறி, அருகிலிருந்த கண்மாயில் கவிழ்ந்தது. இதில் 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த விபத்துக்கு முதல்வர் பழனிசாமி, நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி, உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்.

மேலும், படுகாயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு 25,000 ரூபாயும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…