சரும பராமரிப்பில் காபி

காலையில் எழுந்ததும், உடலைப் புத்துணர்வாக்க அனைவரும் டீ அல்லது காபி குடிப்பது வழக்கம். இதில், காபிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்.
காபி, உடலுக்கு மட்டுமல்லாமல் சருமத்திற்கும் புத்துணர்வை அளிக்கிறது. காபியில் இருக்கும் கொலோஜன் என்று கூறப்படும் வேதிபொருள் முகத்தில் உள்ள தசைகளை இறுக்கி சருமத்தில் சுருக்கம் இல்லாமல் செய்யும். மேலும்,சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி பொலிவடைய வைக்கும்.

காபியைப் பயன்படுத்தி செய்யும் சில சரும பராமரிப்புகளை இங்கு காணலாம்.
காபி தூள் ஸ்கரப்
முகத்திற்கு ஸ்கரப்பாக காபி தூளைப் பயன்படுத்தலாம். இது கெமிக்கல்கள் கலந்த ஸ்கரப்பை போல சருமத்திற்குக் கெடுதல் விளைவிக்காது. காபி பொடியில் சிறிதளவு கரும்பு சக்கரை மற்றும் ஆலிவ் ஆயில் கலந்து முகத்திற்கு வட்ட வடிவத்தில் மசாஜ் செய்வதன் மூலமாக முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி விடும்.

காபி தூள் பேஸ் பேக்
முதலில் கடலை மாவுடன், காபி தூள் சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். இதனை முகத்தில் தடவி15 நிமிடங்களுக்கு, அப்படியே விட்டு விட வேண்டும். காய்ந்தவுடன் கழுவினால் முகம் பளிச்சென்று தோன்றும்.

இரண்டு ஸ்பூன் காபி தூள், ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை கலந்து கொள்ள வேண்டும். இதை முகத்தில் தடவி 10 நிமிடம் காயவிட்டு பின் கழுவினால் சருமமானது மென்மையாக இருக்கும்.
காபி தூளை எலுமிச்சை சாற்றோடு கலந்து முகத்தில் பேக் போன்று பயன்படுத்தினால் ஃபேசியல் செய்தது போல் முகம் மின்னும். சென்சிடிவ் ஸ்கின் இருப்பவர்கள் எலுமிச்சைக்கு பதிலாக ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம்.