2ஆவது டெஸ்ட்: 25 ஆவது சதத்தை பதிவு செய்தார் கோலி

இங்கிலாந்து அணிக்கு எதிரான, இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, 329 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் அபாரமான பந்து வீச்சால் 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து, இன்று ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு புஜாராவும், ரோஹித் சர்மாவும் ஏமாற்றம் அளித்தனர். முதல் ஓவரிலேயே புஜாரா 7 ரன்களில் ரன் அவுட்டானார். அடுத்து, ரோஹித் சர்மா 26 ரன்களில் லீச்சின் பந்தில் ஆட்டமிழந்தார்.

மூன்றாம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையின் போது, இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி சிறப்பாக விளையாடி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 25ஆவது அரைசதத்தை பதிவு செய்துள்ளார். தற்போது, இந்தியா 375 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *