வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு!

தமிழகத்தில் சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. ஒரு கிலோ வெங்காயம் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

வெங்காயம் அதிகம் விளையும் பெரம்பலூர் மாவட்டத்தில், விவசாயிகளிடமிருந்து 80 முதல் 90 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், இடைத்தரகர்கள் மூலமாக மார்க்கெட்டுகளில் கிலோ 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், பருவம் தவறிய மழை, புயல்களால் வெங்காய உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், வெங்காயத்தின் விலை அடுத்த நவம்பர் மாதம் வரை அதிகரிக்கவே செய்யும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.