பெட்ரோலில் 10% எத்தனால் கலப்பு; கவனம் தேவை
சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, பெட்ரோலில் 10% எத்தனால் கலந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் இனி வாகனங்களை கவனமுடன் பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வாகனத்தைச் சுத்தம் செய்யும் போதும், மழைக்காலங்களிலும் பெட்ரோல் டாங்கிற்குள் தண்ணீர் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பெட்ரோலில் உள்ள எத்தனாலை ஈர்க்க சிறிதளவு தண்ணீரே போதுமானது. இது பெட்ரோலில் உள்ள எத்தனாலையும் தண்ணீராக மாற்றி அடியில் தங்கி விடும். இதனால், வாகனத்தை இயக்கும் போது, கடினமாக இருக்கும் அல்லது குலுங்கி குலுங்கி செல்லும்.
மேலும், வாகன ஓட்டிகள் பெட்ரோலின் தரத்தை சில்லறை விற்பனை நிலையங்களில் தெரிந்து கொள்ளலாம். ஆனால், வெளியே சென்ற பிறகு எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்று, தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம் அறிவித்துள்ளது.