நள்ளிரவு முதல் ஃபாஸ்ட் டேக் கட்டாயம்

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் இன்று நள்ளிரவு முதல் வாகனங்களுக்கு ஃபாஸ்ட் டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஃபாஸ்ட் டேக் அட்டை இல்லாத வாகனங்கள் இனி இரண்டு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஃபாஸ்ட் டேக் அட்டையை செயல்படுத்துவதற்கான வழிமுறை மற்றும் அதை செயல்படுத்தும் முறைகள் விவரிக்கப்பட்டுள்ளது.

ஃபாஸ்ட் டேக் அட்டை பெறுவதற்கு காரின் பதிவுச் சான்று மற்றும் உரிமையாளரின் அடையாளச் சான்று உள்ளிட்டவற்றை நேரடியாக எடுத்துச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

அட்டையை வாங்கியவுடன் ஃபாஸ்ட் டேக் செயலியை ஸ்மார்ட்ஃபோனில் தரவிறக்கம் செய்து கொண்டு, அட்டையில் உள்ள எண்ணையும், ஓடிபி எண்ணையும் வைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும், ஃபாஸ்ட் டேக் செயலியை நீங்கள் கணக்கு வைத்திருக்கும் ஏதேனும் ஒரு வங்கியுடன் இணைத்துக் கொள்ளலாம். இல்லையெனில், மொபைல்போன் ரீசார்ஜ் செய்வது போல அந்த ஃபாஸ்ட் டேக் வாலட்டில் பணத்தை வரவு வைத்துக் கொண்டு பயணத்தை தொடர முடியும்.

தானியங்கி முறையில் வங்கி கணக்கிலிருந்து ஃபாஸ்ட் டேக் செயலி மூலமாக பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதியையும் நீங்கள் செயல்படுத்திக் கொள்ள முடியும். ஒரு ஃபாஸ்ட் டேக் அட்டையை ஒரு வாகனத்திற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *