சாதி ஒழிப்புக்கு கலப்புத் திருமணங்களே சிறந்த வழி – உச்ச நீதி மன்றம்

பெங்களூருவிலிருந்து டெல்லி வந்த எம்பிஏ பட்டதாரி பெண், எம்.டெக் முடித்த கல்லூரி துணை பேராசிரியரை கலப்புத் திருமணம் செய்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து, பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், காதல் கணவரை விட்டு விட்டு பெற்றோருடன் செல்லுமாறு, புகாரை விசாரித்த காவல் அதிகாரி அறிவுறுத்தியதாக சொல்லப்பட்டுகிறது. இதற்கு அந்த பெண் மறுத்து விடவே, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், “படித்த இளம் பெண்களும் ஆண்களும் தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். பெற்றோர் செய்து வைக்கும் ஒரே சாதியிலான திருமணங்களை விட, கலப்பு திருமணங்களே சாதியை ஒழிக்கும்.” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், சாதி ஒழிப்புக்கு கலப்புத் திருமணங்களே சிறந்த வழி என்று டாக்டர். அம்பேத்கர் கூறியதையும், தீர்ப்பில் நினைவு கூர்ந்துள்ளார் நீதிபதி.