100 ஆண்டு பாரம்பரிய அன்னபூரணி சிலை இந்தியாவிடம் ஒப்படைப்பு

கனடாவில் உள்ள ரெஜினா பல்கலைக்கழகத்தின் மெக்கென்சி கலைக்கூடத்தில் பெண் கடவுளின் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அந்த கலைக்கூடத்தை பார்வையிட்ட திவ்யா மெஹ்ராவுக்கு கடத்தி வரப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வந்தது.

இதனால், அந்த சிலை பற்றிய விவரங்களை கலைக்கூட அதிகாரிகளிடம் கேட்டிருந்தார். இந்நிலையில்,  அந்த சிலை வாரணாசியின் ராணியும் உணவுக் கடவுளுமான அன்னபூரணியின் சிலை  என கண்டறியப்பட்டது.

அந்த சிலையை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்க ரெஜினா பல்கலைக்கழகம் தாமாக முன்வந்தது.

பல்கலைக்கழக துணைவேந்தர் தாமஸ் சேஸ் கடந்த நவம்பரில் ஒட்டாவாவில் உள்ள இந்தியத் தூதர் அஜய் பிசாரியாவிடம் சிலையை ஒப்படைத்தார்.

இதனையடுத்து, சிலையை இந்தியா கொண்டுவருவதற்கான  நடைமுறைகளை கலாச்சாரத் துறை விரைவுபடுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *