குடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று மேற்கு வங்கத்தின் கூச்பெர்க் பகுதியில் பிரசாரம் செய்தார்.
அப்போது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நடைமுறைபடுத்துவோம் என்று 2018ல் பிரதமர் மோடி உறுதியளித்தார்.
இதன்படி, 2019 ல் சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஆனால், கொரனா காலத்தால் முறையாக சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியவில்லை. , கொரனோ தடுப்பூசி முகாம்கள் நிறைவடைந்தவுடன், குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
மேலும், குடியுரிமை இல்லாமல் தவிக்கும் மேற்கு வங்க மத்துவா சமூக மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக எதிர்கட்சியினர் தவறான தகவல்களைப் பரப்புகின்றனர். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.